சனி, 7 நவம்பர், 2009

மௌனமாய் ஒரு முத்தம்....


இறைவன் உனக்கு இரு விழிகள் கொடுத்தான்
ஏனோ அவை என் உயிர் வாங்கும் என்பதை மறந்தான்..

உன்னை என் கைகளில் ஏந்தி நிற்கிறேன்
உன்னோடு சேர்ந்து என் எடையும் குறைகிறது.....

உன்னை பற்றி கவிதை வரைய ஆசை பட்டேன்
எதில் இருந்து மை எடுக்க......
உன் கரு விழியில் எடுக்கவா...
உன் கார் கூந்தலில் எடுக்கவா...
இதை கொண்டு கவிதை வரைந்தால்
அது உன் அழகுக்கு அரை கூவல்......
என் உதிரம் கொண்டு எழுதுவேன் ஏனெனில்
அவை உன்னை சேர வே என்னுடலில் ஓடுகின்றது....உன்னை எங்கு முதம்மிட....
உன் நெற்றி என்னும் மேடையில் அரங்கேட்ரவ
வேண்டாம் உன் கண்கள் கோபம் கொள்ளும்...
உன் சிவந்த கன்னங்கள் இரண்டில்
எதில் பதிக்க என் இதழின் ஈரத்தை....
உன் மெல்லிய இதழோடு இதழ் சேர்த்தால்
மிஞ்சிய பாகம் எல்லாம் நோகும்....
என் உடல் என்னும் இதழ் கொண்டு
உன்னை முத்தமிடுவேன் முழுவதுமாய்....உன் மெல்லிய இடை கண்டு ஏனோ
நெளிந்து போனேன் எடை குறைந்து போனேன்....

பூக்களில் உள்ள தேன் கொண்டு
உன் இதழ் செய்தானோ நிச்சியம்
இல்லை உன் இதழ் கொண்டே பூக்களுக்கு
தேன் கொடுத்தான் இறைவன்.......

ஏனோ உன்னுள் மலர்ந்திருக்கும் இரு மொட்டுக்கள்
மாலையில் என் மௌனத்தை கலைக்கிறது.....இசை கேட்கும் ஆசை எனக்கு அதுவும்...
என்னுடல் கொண்டு உன்னுடல் என்னும் வீணை
மீட்டி நீ நாணம் என்னும் ராகம் பாடி சிணுங்கும் ஓசை....

அன்போடு நான் சொன்ன வார்த்தைகள் ஒரு போதும் மறையாது...
என் அன்பானவளே உன் அன்புக்கு உரியவனாய் என்றும் இருப்பேன்
உன் அருகினிலே என் எழுத்துக்களில்.....


உன் அன்புள்ள

அருண் பிரகாஷ்........

ALL RIGHTS RESERVED.............

ArunB.Prakash

என் அன்பே......

அன்பே நீ என் அருகில் இல்லை ....
ஏனோ தொலைவிலும் இல்லை....
கண்முழித்து பார்க்கிறேன் கணவாய்
களைந்து செல்கிறாய்......
உன் கண் பார்த்த பின் சில நொடி ..
உன் பார்வைக்காக ஏங்குது என் மனம்...

நீ என்னை பார்த்த உடன் ஏனோ சில நொடி
மௌன மொழி பேசி கொல்கிறாய்....
பின் உன் இதல் சிரிக்கும் நேரம்
என் தூரம் உணர்த்துகிறாய்.....

உன் மடி சாய ஆசை தான் எனக்கு ...
மடி கணம் தாங்குமோ என்ற பயம் ..
உன் நெத்தியில் இதல் பதிப்பேன்..
கண்களில் காதல் வளர்ப்பேன்
கன்னங்களில் உள்ள சிவப்பை
ரோஜா மலருக்கு பரிசு அளிப்பேன்...


என் இரு கை கொண்டு உன்னை அணைப்பேன்
உன் இடை நோக நீ சினுங்கும்வேளை எனை மறப்பேன்...
அடி வானம் சிவந்த உன் இதழ்களில்..
என் இதழ் பதிப்பேன் அதில் தென் சுவைப்பேன்...
மலரே நீ மலர்ந்த ரகசியம் அறிய உன்
மலர் அங்கங்கள் கொண்டு என் ஆசை மாலை தொடுப்பேன்....
உன் வாசம் சிறை புடித்து சென்று விட்டது...
மீள முடியாமல் தவிக்கின்றேன் ....
ஒரு நூறு இரவு கழிந்தது பகலும் கழிந்தது...
நான் உன் மேல் கொண்ட அன்பு சிறு துளி
அளவும் குறையாமல் உள்ளது கண்ட நாள் முதல்...
அன்பே நாம் சந்திக்கும் வேலை நோக்கி என் இரவுகள்
போகிறது....உன் நினைவோ என் தூக்கத்தை கொண்டு சென்றுவிட்டது..

நீ பூமியில் பிறந்தது எனக்கு வெளிச்சம்...
அன்பே உன் காதல் என் கண்களுக்கு வெளிச்சம்..
உன்னுடம் சேரும் நாள் என் வாழ்வின் வெளிச்சம்..
கடவுள் கஞ்சனடி உன்னை எனக்கு கொடுக்கும் விஷயத்தில்...
உன் அன்புக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
உன் கண் போன்ற அழகான...
உன் இதழ் போன்ற சிறப்பான...
உன் பாதம் போன்ற மென்மையான...
உன் மனம் போல் வளமான ...
வாழ்வு என்றும் நீ வாழ வேண்டும்....
உன் அருகில் இல்லை என்றாலும்....
உன் நினைவுகளுடன் தொலைவில் வாழ
ஆசை படும் உன் அன்புள்ள

அருண் பிரகாஷ் ................

ALL RIGHTS RESERVED.............

ArunB.Prakash

புதன், 19 ஆகஸ்ட், 2009

கோபம் .....

இனியவளே என்னை இழந்தேன் ஒரு நொடி உன்னை மறந்தேன்
நீ
இல்லாத வாழ்வு தனை வாழ துணிந்தேன்....
நிலம் நனைய வந்த மழை மேகம் நீ..
உன்
ஒரு துளி படும் முன்பே குடைவிரித்தேன்
ஏனோ
உன்னை தூரக் கலைந்தேன் ..
தூக்கி
எறிந்த பின்பு தான் அறிந்தேன் நீ தனியாக
செல்ல
வில்லை என் உயிர் மலரை கொண்டுசென்றாய் என்று ..
ஆயிரம் அன்பு வார்த்தைகள் சொன்னேன் உன்னிடம்
அழகாய்
தெரிந்தது எனை மறந்து சொன்ன அந்த ஒரு வார்த்தை
என்னுயிர் உன்னை என்னிடம் இருந்து பறித்துசென்றது ....
உன்
கண்களில் பார்வை பெற கைகளில் மோட்சம் பெற
உயிர்
தேடி உன்னை காண விரைந்தேன் ..
மனமெல்லாம்
மாறி நின்றாய் மணக்கோலத்தில்
என் வாழ்கை தான் உன்னிடம் இல்லை
என்
வார்த்தைகளையாவது வைத்துக்கொள் வண்ணம் மாறாமல்...
சாபமா
என் கோபமா என்ன சொல்வேன்.....


ALL RIGHTS RESERVED.............

ArunB.Prakash

சனி, 25 ஏப்ரல், 2009

நினைவுகள்....

ஏனோ உன் நினைவுகள் என்னை வட்டமிட....

குளத்தில் விழுந்த கல்லாய் நான் குலுங்க...

காதல் என்பது இருட்டாய் இருந்தது கண்கள் உன்னை காணாதவரை...

இருளில் ஒலி தந்தவள் நீ அடி...தினம் அலைந்தேன் உனைத்தேடி....

உன் கண்களை காணவே ஜென்மம் எடுத்தேனோ....

நீ என் இதய மலரில் உயிர் துளி தேனோ....

வானத்தின் நீளத்தை மிஞ்சியது என் இரவின் நீளம்...

என்று கேட்பேன் நம் திருமண மேளம்...

என்னை பார்த்து சிரிக்கின்றாய் காதலிலா ..கரிசனத்திலா...?

உண்மையை உலகுக்கு சொல்வாயா..நீ என் உலகமென...

எனக்கு கல்யாணம் கசக்கும்...காதலி உன்னை கை பிடிக்கும் வரையில்....

ப்ரமன் எனக்கு கொடுத்த வாழும் நாள் முற்றும்...

உனக்காய் இருப்பேன் என்றும் உன் நினைவுகளுடன்.......


ALL RIGHTS RESERVED.............

ArunB.Prakash

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

பிட்சை பாத்திரம்.....


அன்புள்ளம் கொண்டவளே...அழகின் விளக்கமே....

என்னிடம் எனக்கென இருந்தது ஒரு இதயம் அதுவும் உன் வசம்....

தேடினேன் வழி முழுதும்..நீ எங்கே ,கொண்டு சென்ற என் இதயம் எங்கே...

ஏனோ பூக்கள் வழியெங்கும்..தேவதை உன் வருகைக்க்காகவா....

என் இதயம் மீட்கும் முயற்சியில் நான்.....

கடந்து சென்றாய்... காத்து நின்றேஇன் கைப்பற்றும் நம்பிக்கையில்...

உன்னை பார்த்த போதிலிருந்தே நான் பேசாமலே நின்றேன்...

தூக்கம் எனை மறந்தது...நானோ துறந்து விட்டேன்....

உன்னிடம் இன்றாவது என் காதல் மோட்சம் பெருமா ?

இதயம் துடித்தது....ஒரு நொடி நீ என்னை பார்க்கவே.....

என் அருகே வந்தாய் எனக்காய் ஒரு காகிதம் தந்தாய் ....

பிரித்து பார்தேன் ஏதும் எழுதாமல் என்னை குழப்பினாய் ....

என் அருகில் நின்றவனிடமும் அதே காகிதம் தந்தாய்....

பின்னே தெரிந்தது இதயம் தொலைத்த காரணத்தால்,

நானோ பிட்சை பாத்திரம் ஏந்தி நின்றேன் என்று.......

All Rights Reserved.....

ArunB.Prakash